முறிந்த காதல் சேரும்

Update:2025-04-01 00:00 IST

2025 ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். முறிந்த காதல் மீண்டும் சேரும். காதல் திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. வேலை வாய்ப்புகள் சுமாராக இருக்கிறது. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. பெரிய அளவில் கடன் இருந்தால் குறையும். நோயில் இருந்து விடுபடுவீர்கள். யாருக்கும் பணம் கடன் கொடுத்தால் அது திரும்ப கிடைப்பதில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. சொந்த தொழிலும் பரவாயில்லை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். உங்கள் நட்பு வட்டாரம் பெரிய அளவில் டெவலப் ஆகும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை நிமித்தமாக வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறுங்கள். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி வழிபாடு மற்றும் சிவன் தரிசனம் செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்