கடன், நோய் குறையும்

Update:2025-04-08 00:00 IST

2025 ஏப்ரல் 08-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கடன் இருந்தால் குறையும். நோய் குறைவதற்கான வாய்ப்பு அல்லது நோயில் இருந்து முற்றிலும் விடுபடுவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. எதிர்பாராத எண்டெர்டெயின்மெண்ட், டூர், டிராவல் இருக்கிறது. புதிய காதல் மலரும். முறிந்த காதல் மீண்டும் சேரும். ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றியடையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கூடும். வருமானங்கள் கூடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. வேலையில் கவனமாக இருங்கள். நீங்கள் பார்க்கும் வேலையை விடலாம் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய காலமாக உள்ளது. தொழில் சுமார் என்பதால் லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை. இந்த வாரம் முழுவதும், முருகன் வழிபாடு மற்றும் துர்க்கையை தரிசனம் செய்யுங்கள்.   

Tags:    

மேலும் செய்திகள்