வேலையில் பிரச்சினை

Update:2024-10-01 00:00 IST

2024 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் விருப்பங்கள், ஆசைகள், எண்ணங்கள் பூர்த்தியாகும். உங்களின் ராசி பகவான் 8-ஆம் இடத்தில் குருபகவானுடைய நட்சத்திரத்தில் இருப்பதால் பெரிய அளவில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு, சந்தர்ப்பம் உருவாகும். நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அது சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா? என்றால் வாய்ப்புகள் இல்லை. ஒருபக்கம் நன்மைகள் அடைவது போன்ற ஒரு தோற்றம். ஆனால், பெரிதாக நன்மைகள் இல்லை. தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம்; உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. யாருக்கும் பணம் கடன் கொடுக்க வேண்டாம். அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குழந்தை இல்லாதவரக்ளுக்கு குழந்தை பாக்கியம், அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை சக ஊழியர்கள், உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க வாய்ப்புகள் இல்லை. அதனால் வேலையில் எல்லோரையும் பொறுமையாகவும், நிதானமாகவும் கையாளுங்கள். மற்றவர்களோடும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். இல்லையென்றால் தேவையில்லாத மனவருத்தங்கள், பிரச்சினைகள் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்