கடன் கூடுவதற்கு வாய்ப்பு

Update:2024-10-08 00:00 IST

2024 அக்டோபர் 08-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருந்தாலும் நீங்கள் கடன் வாங்குவதற்கான சூழ்நிலை இருக்கிறது. தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் ஓரளவுக்கு இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நன்மைகள், நல்ல வருமானங்கள் உண்டு. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. வேலை தேடிக் கொண்டிருந்தால் கிடைக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். முடிந்தவரை கடன் வாங்காதீர்கள். ஏனென்றால் கடன் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள். சொந்த தொழில், கூட்டுத்தொழில் இரண்டும் சுமாராக உள்ளது. இரண்டாம் திருமணத்துக்கு முயற்சி செய்பவர்கள் புரட்டாசி மாதமாக இருந்தாலும் முயற்சி செய்யுங்கள். அந்நிய பாஷை, அந்நிய மொழி பேசும் நண்பர்களால் சகாயம் கிடைப்பது மட்டுமின்றி உங்கள் நட்பு வட்டம் பெரிய அளவில் டெவலப் ஆக வாய்ப்புள்ளது. உங்கள் முயற்சிகள் ஏதோவொரு விதத்தில் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். எண்ணங்கள், சிந்தனைகள் வலுப்பெற வாய்ப்புள்ளது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். இந்த வாரம் முழுவதும் பெருமாளையும், சனி பகவானையும் தரிசனம் செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்