தொழிலில் லாபம்

Update:2024-08-27 00:00 IST

2024 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தேவையில்லாமல் யாரிடமும் கடன் வாங்காதீர்கள். அதே நேரம், கடன் கொடுக்காதீர்கள். இரண்டு தரப்பிலும் அவை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. மணவாழ்க்கை ஓரளவு மகிழ்ச்சி, சந்தோஷகரமானதாக இருக்கும். பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு, அந்த தொழில் அந்தஸ்து, கௌரவம், லாபத்தோடு சேர்த்து வருமானத்தையும் கொடுக்கும். கையில் பணம், தனம், பொருள் என்பது இருந்துகொண்டே இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனாலும் கூட நிறைய போராட்டங்களுக்கு பிறகுதான் அந்த முயற்சிகள் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய சொத்துக்கள் வாங்க நினைத்தால் வாங்கலாம். ஆனால், அந்த சொத்தால் பின்னாளில் ஏதும் பிரயோஜனம் இருக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், ரேஸ், லாட்டரி ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பொறுமையாக இருங்கள். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம் உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. கையில் பணம், தனம், பொருள், பேங்க் பேலன்ஸ் இருப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. பணவரவு, தனவரவு இருந்தாலும் தேவையில்லாத செலவினங்களும் இருக்கின்றன. முன்னோர்களின் சொத்து, கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள்வரவு இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்