மண வாழ்க்கையில் மகிழ்ச்சி
2024 டிசம்பர் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கல்வி நன்றாக உள்ளது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யலாம். மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். தொழில் நன்றாக உள்ளது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் செய்பவர்களுக்கும் நன்றாக உள்ளது. குறிப்பாக பிளாட்பார தொழில் செய்பவர்களுக்கு இன்னும் சிறப்பாகவே உள்ளது. ஆன்லைனில் தேடுதல் என்பது நிறைய இருக்கும். வேலை, வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கிறது. ஏதாவது ஒரு வேலை, வருமானம், சம்பாத்தியம் என்பது இருந்துகொண்டே இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத நட்பு வட்டாரம், மூத்த சகோதர - சகோதரிகள் ஆகியோரால் நன்மைகள் என அத்தனையும் இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும், நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவான் மற்றும் தன்வந்திரி பகவானையும் வழிபாடு செய்யுங்கள்.