அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும்

Update:2024-11-19 00:00 IST

2024 நவம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. அப்பா, அம்மா இருவரின் அன்பு, ஆதரவு கிடைக்கும். கல்வி நன்றாக உள்ளது. சொந்தமாக இடம், வீடு வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. எவ்வளவு இருந்தாலும் நீங்கள்தான் மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷகரமாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால், எவ்வளவு இருந்தாலும் நீங்கள்தான் ஒரு திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். அதுமாதிரியான மனநிலைகளை மாற்றுங்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். தொழிலில் நல்ல லாபம் இருக்கிறது. உங்கள் வேலையில் தனித்துவமாக தெரிய வாய்ப்புகள் இல்லை. உங்கள் பிசினஸை விரிவுபடுத்த நினைப்பவர்கள் செய்யுங்கள். அதற்கான சூழ்நிலைகள் உள்ளன. பெரிய அளவில் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கும் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடன் வாங்கி சொந்தமாக சொத்துக்கள் வாங்குவதற்கான சூழல்களை கிரகங்கள் உருவாக்கிக் கொடுக்கும். வீடு வாடகைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. போட்டித்தேர்வுகள் எழுதி இருந்தால் வெற்றி பெறுவீர்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்