வேலையில் நிம்மதி இருக்காது

Update:2024-12-03 00:00 IST

2024 டிசம்பர் 03-ஆம் தேதி முதல் டிசம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உயர்கல்வி நன்றாக உள்ளது. லோன் போட்டு, கடன் வாங்கியாவது அசையும், அசையா சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. எந்த வேலையில் இருந்தாலும் மன நிம்மதி என்பது இருக்காது. அதனால், கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் நினைப்பது அனைத்தும் நன்மையாக முடியும். பிரிந்த கணவன் - மனைவி சேர வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணை மற்றும் தொழில் பார்ட்னர் இருவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. குழந்தை பாக்கியம் உண்டு. குழந்தைகளால் நன்மைகள், மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. நட்பு வட்டாரம் விரிவடையும். அவர்களால் ஏற்றம், முன்னேற்றம் மகிழ்ச்சி இவை அத்தனையும் இருக்கிறது. திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடக்கும். அது சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெறும். வழக்குகள் இருந்தால் அவற்றில் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் கிரக ரீதியாக இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும், பெருமாள் கோயிலில் இருக்கும் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்