உடல் ஆரோக்கியத்தில் கவனம்

Update:2024-10-22 00:00 IST

2024 அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தொழிலில் முதலீடு வேண்டாம். கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இல்லை. கணவன் - மனைவி பிரிவு, ஒரே வீட்டில் இருந்தால் மனஸ்தாபங்கள், வைத்தியச் செலவுகள் ஆகியவை இருந்துகொண்டே இருக்கிறது. மணவாழ்க்கையில் திருப்தியற்ற மனநிலை என்பது இருக்கும். சிறுதொழில், சுய தொழில் எதுவாக இருந்தாலும் சுமாராக உள்ளது. உங்கள் மற்றும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை, வேலை இல்லாமல் இல்லை; ஆனாலும் ஒரு திருப்தியற்ற மனநிலையிலேயே இருப்பீர்கள். உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தர வாய்ப்பு இல்லை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு, சந்தர்ப்பங்கள் உருவாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. தேவையில்லாமல் யாரிடமும் கடன் வாங்காதீர்கள்; கடனும் கொடுக்காதீர்கள். பொருளாதார வசதி நன்றாக இருந்தால் முதலீடு செய்யுங்கள். மூத்த சகோதர - சகோதரிகளால் பிரச்சினை, இன்னொருபக்கம் நன்மை என இரண்டுமே இருக்கிறது. பெண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிவனையும், பெருமாளையும் வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்