சிறு முயற்சி, பெரும் வெற்றி

உங்கள் ராசிநாதன் கேது மற்றும் செவ்வாய் உடைய பார்வையை பெற்றிருப்பதால் மன அழுத்தம் மற்றும் மனக்குழப்பம் ஏற்படும்.

Update: 2023-10-02 18:30 GMT

2023, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

உங்கள் ராசிநாதன் கேது மற்றும் செவ்வாய் உடைய பார்வையை பெற்றிருப்பதால் மன அழுத்தம் மற்றும் மனக்குழப்பம் ஏற்படும். வேற்றுமொழி மனிதர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். 3 மற்றும் 4 தேதிகளில் மேற்கொள்ளப்படும் சிறு முயற்சிகள் பெரும் வெற்றியை தரும். 5, 6, 7 ஆகிய தேதிகளில் நீங்கள் செய்யப்போகும் முயற்சிகளில் குழப்பம் ஏற்படும். 8, 9 ஆகிய தேர்களில் தீய பலன்கள் ஏற்படும். வெளிநாடு மற்றும் தூரதேச பயணம், புதிய முயற்சிகள், கருத்து வேறுபாடுகள் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது.

மேலும் செய்திகள்