குடும்பத்துக்குள் குழப்பம்

Update: 2023-09-25 18:30 GMT

2023, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்

இந்த வாரத்தில் வெளிநாடு தொடர்புடைய விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வேற்றுமொழி, வேற்று இனத்தவருடன் சரியான முறையில் அணுகுவது நல்லது. குலதெய்வ வழிபாடு, இறை வழிபாடு நன்மை பயக்கும். குடும்பத்துக்குள் சற்று குழப்பம் வரும் என்பதால் பேச்சில் கவனம் தேவை. முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வியாபாரம் சார்ந்த முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். சகோதரர் வழியில் நன்மை கிடைக்கும். 27, 28 தேதிகளில் விநாயகர் வழிபாடு செய்து நாளை துவக்க நற்பலன் கிட்டும். வாகனம், வீடு வாங்குவதில் கவனம் வேண்டும். உடல் உபாதைகள், மன கஷ்டம் ஏற்படும். சில விஷயங்கள் தாமதமாகும். 

Tags:    

மேலும் செய்திகள்