சமூக ஊடகங்களால் பணவரவு
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு, கடந்த 3 அல்லது 5 வருடங்களாக பதவி மற்றும் சம்பள உயர்வுக்காக காத்திருப்போருக்கு துறை மற்றும் வேலை மாற்றங்கள் நல்லவிதமாக அமையும்.
By : ராணி
Update:2023-07-11 11:44 IST
அற்புதமான முன்னேற்ற மாதமாக இந்த மாதம் அமையும். கடந்த 7 ஆண்டுகளாக ஏழரை சனியின் ஆதிக்கத்தின் கீழ் மிகப்பெரிய கஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். எதிலும் நன்மை பிறக்கும். சிலருக்கு வீட்டுக் கனவு, வாகன கனவு நனவாகும். ஒரு வருடகாலத்திற்கு கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் இருக்கும் என்பதால், சொந்த திறமைகளை வைத்து அதன்மூலமே செயல்படுகிற நிலை இருக்கும். அறிவுசார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் இருக்கும். கடந்த 3 அல்லது 5 வருடங்களாக பதவி மற்றும் சம்பள உயர்வுக்காக காத்திருப்போருக்கு துறை மற்றும் வேலை மாற்றங்கள் நல்லவிதமாக அமையும். சமூக ஊடகங்கள் மூலமாக பணவரவுகள் கிடைக்கக்கூடிய நிலை உருவாகும்.