பிரிந்த குடும்பம் சேரும்

Update:2024-10-29 00:00 IST

2024 அக்டோபர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. கையில் பணம், தனம், பொருள் என்பது இருக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மென்ட் இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் அல்லது அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். இந்த வாரம் முழுவதும் உடல் உழைப்பு இல்லாமல் சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் உள்ளது. கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து, வருமானம் இருக்கிறது. அரசியலில் புகழ், அந்தஸ்து, விளையாட்டுத்துறையில் இருந்தால் விருது, கேடயம் ஆகியவை இருக்கிறது. யாருக்கும் தேவை இல்லாமல் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால்; நீங்கள் நினைக்கும் காரியங்கள் நடைபெற அதற்கான முயற்சிகளை செய்யுங்கள்; கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்