உறவுகளிடம் கவனம்

Update: 2024-05-13 18:30 GMT

2024 மே 14-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் முழுவதும் பெரிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். யாரையும் பெரிதாக நம்பாதீர்கள். நம்பியவர்களால் பிரச்சினைகள் ஏற்படும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் வேண்டாம். தெளிவான சிந்தனை, தெளிவான மனநிலையோடு இந்த வாரத்தை கடந்து செல்லுங்கள். அவசரம், அவசியம் இருந்தால் தவிர பயணம் வேண்டாம். எல்லாவிதமான உறவுகளிடமும் கவனமாக இருங்கள். வீடு மாற முடியவில்லை, சொத்துக்களை விற்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். விவசாயம் சார்ந்த துறைகளில் இருந்தீர்கள் என்றால் ஓரளவு மகசூல், லாபம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் பரவாயில்லை. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலிப்பவராக இருந்தால் அந்த காதல் வெற்றியடையும். பிரிந்த காதல் சேரும். ஷேர், டிரேடிங், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் அடக்கி வாசியுங்கள். எல்லாம் உங்கள் உணர்வுகளை தூண்டுவது போன்று இருக்கும். ஆனால் எதுவும் லாபகரமாக இல்லை. இந்த வாரம் உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களது பணம் அல்லது பொருள் மொத்தமாக முடங்கிக்கொள்ளும். சொந்த தொழில் பரவாயில்லை. கணவன் - மனைவி உறவிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிவன் தரிசனம் மற்றும் பெருமாள் வழிபாடு செய்வது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்