பேச்சை குறைப்பது நல்லது

Update:2024-10-22 00:00 IST

2024 அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி சந்தோஷம் இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. வேலையின் நிமித்தமான முன்னேற்றம், வருமானம், புரொமோஷன், இன்க்ரிமெண்ட் ஆகியவற்றை எதிர்பார்த்தவர்களுக்கு இவை அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய காதல் விஷயங்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். அந்நிய மொழி பேசும் நண்பர்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் இருக்கிறது. யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. சொந்த தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு லாபம், வருமானம் இருக்கிறது. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அதற்கான வாய்ப்பு, பேச்சு வார்த்தைகள் நடைபெற்று அது உங்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு சுமாராக இருப்பதால் அடக்கி வாசியுங்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் பொறுமையாக இருங்கள். குழந்தைகளால் தேவையற்ற பிரச்சினைகள், நன்மைகள் இரண்டுமே இருந்துகொண்டு இருக்கும். பேச்சின் மூலமாக வருமானம், சம்பாத்தியம் இருக்கிறது. ஆனாலும், இந்த வாரத்தில் உங்களின் பேச்சை கொஞ்சம் குறையுங்கள். உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருங்கள். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. இந்த வாரம் முழுவதும் பைரவரையும், நரசிம்மரையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்