எதிர்பாராத பயணம்
2024 மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
அரசாங்கத்தால் ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தும் நடக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. சமுதாயத்தில் உங்களுக்கான அந்தஸ்து, புகழ் கூடும். இந்த வாரம் உங்களுக்கு விருதுகள், கேடயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. கையில் பணம், தனம் இருக்கும். வேலை நிமித்தமாக எதிர்பாராத பயணம் அமையும். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து ஏதாவது ஒரு தொழில் செய்பவராக இருந்தால் லாபங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைப்பது நடக்கும். யாரை நம்பியிருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு ரூபத்தில் உதவி செய்வார்கள். யாரை தொடர்பு கொள்ள நினைக்கிறீர்களோ அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் விநாயகரை தரிசனம் செய்வது நன்மையை தரும்.