முயற்சிகள் சுமார்

Update: 2024-04-22 18:30 GMT

2024 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரத்தில் தேவையில்லாத விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. அறுவை சிகிச்சை ஏதேனும் செய்ய வேண்டி இருந்தால் செய்யலாம். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் சுமாராக உள்ளது. இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் சுமாராக இருக்கும். நீண்ட நாட்களாக வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும். இளைய சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. நெருங்கிய உறவினர்களால் நெகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம், வருமானம் இருக்கிறது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வந்து சேரும். நண்பர்களால் நற்பலன்கள், அதே சமயம் அவர்களால் பிரச்சினை என இரண்டுமே உள்ளது. எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் பார்த்து செய்யுங்கள். வாரம் முழுவதும் முருகன் மற்றும் துர்க்கை அல்லது காளி தரிசனம் நன்மையை அளிக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்