நல்லதொரு ஏற்றம்

Update: 2023-12-25 18:30 GMT

2023 டிசம்பர் 26 முதல் 2024 ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஆலய தரிசனம் செய்ய வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாமல் பெரிய முயற்சிகளை செய்ய வேண்டாம். நிதானமும், பொறுமையும் தேவை. கெமிக்கல், ஆட்டோ மொபைல், சிவில், மெக்கானிக்கல் துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம் இருக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஓரளவு மகசூல் கிடைக்கும். சுயதொழில் சுமாராக இருக்கும். வேலையில் திருப்தியின்மை ஏற்படும். தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உயர் கல்வியை தொடரலாம். அப்பாவின் அன்பும், ஆதரவும் பரிபூரணமாக கிடைக்கும். துர்கை வழிபாடு மற்றும் சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்றுவர முன்னேற்றம் அமையும். 

Tags:    

மேலும் செய்திகள்