அதிகாரியால் பிரச்சினை

Update: 2024-04-01 18:30 GMT

2024 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தெய்வ அனுகூலம் இருக்கிறது. சொந்த தொழில் சுமாராகத்தான் இருக்கும். கூட்டுத்தொழில் செய்தால் உங்கள் பார்ட்னர் லாபம் அடைவார். திருமண வாழ்க்கையும் சுமாராகத்தான் இருக்கும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. வருமானம் இருக்கிறது. யாருடைய பணமாவது உங்களது கையில் இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். பழைய கடனை அடைக்க, யாரிடமும் புதிய கடனையும் வாங்காதீர்கள். யாருக்கும் சூரிட்டி, செக்யூரிட்டி போடுவதில் கவனமாக இருங்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. உடன் பணியாற்றுபவர்கள் உதவி செய்வார்கள். அதேநேரம், உங்கள் உயர் அதிகாரியால் பிரச்சினைகள் வரும். இந்த வாரம் முழுவதும் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அதிலும் கவனமாக இருங்கள். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபடுவதன் மூலம் கஷ்டங்கள் குறையும். 

Tags:    

மேலும் செய்திகள்