குழந்தைகளை பிரிவீர்கள்

Update: 2024-06-17 18:30 GMT

2024 ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கடந்த வாரத்தில் இருந்த நிலைகள் மாறி, இந்த வாரத்தில் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு கூடும். மூத்த சகோதர - சகோதரிகள் மீதுள்ள அன்பு, பாசம் கூடும். அதனால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. ஆண் நண்பர்களால் நற்பலன்கள் ஏற்படும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் ஓரளவுக்கு வெற்றிபெறும். நினைப்பது அனைத்தும் நடக்கும். யாரை நம்பியிருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு ரூபத்தில் உதவி செய்வார்கள். எதிர்பார்க்கக்கூடிய, எதிர்பார்க்காத செய்திகள் அத்தனையும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக இடம், வீடு, வண்டி, வாகனம், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. கல்வி சிறப்பாக உள்ளது. அம்மாவால் நற்பலன்கள் ஏற்படும். காதல் விஷயங்கள் ஓரளவு மகிழ்ச்சி, சந்தோஷத்தை தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்காக நிறைய செலவு செய்வீர்கள். குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய முன்னேற்றங்கள் இருக்கின்றன. சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். மணவாழ்க்கையை பொறுத்தவரையில், கணவன் - மனைவி உறவு சுமாராக உள்ளது. இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்