நண்பர்களை பிரிவீர்கள்
2025 ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு கூடும். நல்ல நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. மூத்த சகோதர - சகோதரிகளை விட்டு பிரிந்து போவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. நிறைய கற்றுக் கொள்வீர்கள். சம்பாதிப்பீர்கள். வேலையின் நிமித்தமாக பயணம்; அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பார்த்த, எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு நன்மையாக முடியும். உங்கள் சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் செய்பவர்களுக்கு தொழில் நன்றாக இருக்கும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. தொழில் முனைவோராக, இண்டஸ்ட்ரியலிஸ்ட்டாக வர நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கும் பிரம்மாவையும், மகாகணபதியையும் வழிபாடு செய்யுங்கள்.