வேலையில் ஏற்றம்

Update:2025-04-22 00:00 IST

2025 ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர். 

உங்களின் அந்தஸ்து, புகழ் கூடும். எதிர்பாராத நண்பர்கள் அமைவார்கள். பெரிய மனிதர்களுடைய நட்பு, தொடர்பு உண்டாகும். புரொடக்‌சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த சேல்ஸ், வருமானம் இருக்கிறது. விவசாயத்தில் இருப்பவர்கள் லாபத்தை சம்பாதிக்கலாம். சொந்தமாக இடம், வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வேண்டிய பொருளாதார சூழ்நிலைகள் அமையும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வேலை நன்றாக உள்ளது. வேலையில் நீங்கள் எதிர்பார்க்கும் மானிட்டரி பெனிஃபிட்ஸ் அத்தனையும் கிடைக்கும். உங்களுக்கு வேலையில் ஏற்றம் உண்டு. வருமானங்கள், சம்பாத்தியங்கள் கூடும். தெய்வ அனுகூலங்கள் இருக்கிறது. உயர்கல்வி ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதியில் லாபம், வருமானங்கள் இருக்கிறது. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான முதலீடே செய்யுங்கள். நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும், முருகப்பெருமான் மற்றும் காளியை வழிபாடு செய்து வாருங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்