எதிரிகளை வெற்றி கொள்ளுவீர்கள்

Update:2025-02-11 00:00 IST

2025 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் பரவாயில்லை. மனக்குழப்பங்கள், நிம்மதியற்ற சூழ்நிலைகள் மாறும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. வேறு வேலை, வேறு நிறுவனம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உண்டு. அப்பாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். கல்வி நன்றாக உள்ளது. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணத்திற்கான வாய்ப்பு, சந்தர்ப்பங்கள், குறிப்பாக, இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், பேச்சுவார்த்தைகள் உண்டு. இரண்டு, மூன்று தொழில் செய்பவர்களுக்கு லாபம், வருமானம் இருக்கிறது. வீடு, இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் எதிரிகள் யாராக இருந்தாலும் வெற்றி கொள்ளுவீர்கள். அப்பா, அம்மா இரண்டு பேருடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்