உறவுகளை பிரிவீர்கள்
2025 மார்ச் 18-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் அந்தஸ்து, புகழ் கூடும். தெய்வ அனுகூலம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. நல்ல நண்பர்கள், மூத்த சகோதர - சகோதரிகள் ஆகியோரின் உறவுகளை மெயின்டைன் செய்யுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புரொடக்ஷன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. வீடு, இடம் மாற்றங்கள் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து இருக்கிறது. கணவன் - மனைவி உறவு சுமாராக இருக்கிறது. உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் செல்லுங்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். நல்லது நடக்கும். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கும் பிரம்மாவையும், விநாயகரையும் வழிபாடு செய்யுங்கள்.