முயற்சிகள் வெற்றி பெறும்

Update:2025-04-08 00:00 IST

2025 ஏப்ரல் 08-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். பெரிய மனிதர்களுடைய நட்பு உங்களுக்கு கிடைக்கும். பெரிய அளவில் நிறுவனம், ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும், தொழில் முனைவோராக வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கிரக நிலைகள் சாதகமாக இருக்கிறது. தொழில் பரவாயில்லை. நல்ல நட்புகள் உங்களை விட்டு பிரிய வாய்ப்புள்ளது. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில், பணம், தனம், பொருள் இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் நம்பியவர்கள் உதவி செய்வார்கள். நல்லதொரு வாழ்க்கை அமையும். கல்வி நன்றாக உள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் உங்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகைகள் வருவதில் தாமதம் ஏற்படும். இந்த வாரம் முழுவதும், துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்து வாருங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்