பயணம் செய்ய வேண்டாம்
2025 ஜனவரி 14-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை செய்யுங்கள். கூட்டுத்தொழிலில் பார்ட்னருக்காக உழைக்க வேண்டிய சூழ்நிலை அல்லது அவர் லாபம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடக்கும். இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்புள்ளது. எவ்வளவு சம்பாதித்தாலும் செலவுகள் உண்டு என்பதால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். சொந்தமாக வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க யோகம் உள்ளது. தேவையில்லாத பயணங்களை தவிருங்கள். பெரிய அளவில் ஏதும் திட்டமிடாதீர்கள். வெற்றிபெற வாய்ப்புகள் இல்லை. புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. லாபம் இல்லை. குழந்தைகள் இருந்தால் அவர்களுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட தூர பயணம் செய்ய வாய்ப்புள்ளது. அந்த பயணத்தால் நன்மைகள் ஏற்படும். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் பிரம்மாவை தரிசனம் செய்யுங்கள்.