கவனமாக இருங்கள்

Update:2025-01-21 00:00 IST

2025 ஜனவரி 21-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஒரு பக்கம் தெய்வ அனுகூலம், இன்னொரு பக்கம் தெய்வம் விலகி நிற்க வேண்டிய காலம் என இரண்டும் இருக்கிறது. அதனால், எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள். மற்றவர்களிடம் தேவையில்லாதவற்றை பேசாதீர்கள். குறிப்பாக அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடாதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களின் பணம், பொருள் முடங்கிக் கொள்ள நிறைய வாய்ப்புள்ளது. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் இருக்கிறது. தொழில் சுமாராக இருக்கிறது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் ஃபண்ட, ஆன்லைன் டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். லாபம் கிடைப்பது போல் தோற்றம். ஆனால், தடைகள் இருக்கிறது. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். வேலையில் நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனை முன்னேற்றங்களுக்கும் தடைகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் பெருமாளை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்