நினைப்பது நடக்கும்
2025 ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 2025 மே 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களின் அந்தஸ்து, புகழ் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்ஷனுக்கு தகுந்த நல்ல விற்பனை, லாபம், வருமானம் இருக்கிறது. இண்டஸ்ட்ரியலிஸ்ட், தொழில் முனைவோராக வர நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. தொழில் நன்றாக உள்ளது. தொழிலில் நல்ல லாபத்தை எடுப்பீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் நல்லது நடக்கும். குழந்தைக்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவர்களால் செலவினங்களும் இருக்கிறது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். இறைவனுடைய அனுகிரகம், அனுகூலம் இருக்கிறது. நினைப்பது அனைத்தும் நடக்கும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை இருக்கிறது. தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். ஏனென்றால் அவர்களால் உங்கள் வாழ்க்கையில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்து வாருங்கள்.