நினைத்தது நடக்கும்

Update:2024-10-29 00:00 IST

2024 அக்டோபர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலை வாய்ப்புகள் நன்றாக உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் வேலையில் முன்னேற்றம், பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், போனஸ் போன்றவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏதாவது ஒரு மானிட்டரி பெனிஃபிட்ஸ் கிடைக்கும். வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கணவன் - மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு தேவையில்லாத செலவினங்கள் இருந்துகொண்டே இருக்கும். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் அவை வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்தால் கண்டிப்பாக பண வரவு, பொருள் வரவு இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வேலையாட்களால் நற்பலன்கள் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நீங்கள் நினைத்தது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத பயணம், உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய வாரமாக இருக்கும். தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்