பேச்சை குறையுங்கள்
2025 ஜனவரி 07-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தொழில் சுமாராக உள்ளது. தொழில் தகராறு தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டுவிட்டு நடக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத தெய்வ தரிசனம் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரத்தில் வருமானம் அதிகமாக இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கின்றன. குழந்தைகள் இருந்தால் அவர்களுக்காக செலவு செய்வீர்கள். உயர்கல்வி நன்றாக உள்ளது. ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொண்டிருந்தால் தேர்ச்சி பெறுவீர்கள். வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. நீங்கள் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறீர்களோ அவை அனைத்தும் நடக்கும். வேலையில் மாற்றங்கள் ஏற்படும். பணி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தால் கிடைக்கும். கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். லாபம் வருவது போன்ற தோற்றம். ஆனால், இல்லை. கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கூடும். அரசியல் சார்ந்த துறைகளில் இருந்தால் நல்லதொரு ஏற்றம் இருக்கிறது. பேச்சை குறையுங்கள். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும், விநாயகரையும், பிரம்மாவையும் தரிசனம் செய்யுங்கள்.