பணம் முடங்கி கொள்ளும்

Update: 2024-09-02 18:30 GMT

2024 செப்டம்பர் 03-ஆம் தேதி முதல் செப்டம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் முயற்சிகள் பெரிய அளவில் இருந்தால் மட்டுமே வெற்றி பெறும். உங்கள் கையில் தனம், பொருள், வருமானங்கள் இருக்கும். அதற்கு ஏற்ற செலவினங்களும் உண்டு. குழந்தைகள் இருந்தால் அவர்களுக்காக செலவு செய்ய வேண்டிய காலம். எதிர்பாராத பயணம் ஏற்படும். அந்த பயணம் மனம்நொந்த நிலையில்தான் இருக்கும். முடிந்தால் அந்த பயணத்தை தவிர்த்துவிடுங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், அதற்கு ஏற்ற வருமானங்கள் இல்லை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அந்தஸ்து, புகழ் கிடைப்பது மாதிரியான தோற்றம் இருக்கும். ஆனால் கிடைக்காது. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்கள் பணம் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் வாரமாக இருக்கிறது. வேலையை பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் உண்டு. சம்பள உயர்வு, பணி உயர்வு எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. நல்ல வேலையாட்கள் அமைவார்கள். கடன் கிடைக்கும். சொந்த தொழிலும், மணவாழ்க்கையும் சுமார். கணவன் - மனைவிக்கிடையே பிரச்சினை, பிரிவு, இருவரில் யாராவது ஒருவருக்கு விரயம், வைத்தியச் செலவுகள் உண்டு. எல்லா விஷயத்திலும் கவனம் தேவை. வாரம் முழுவதும் முருகன் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்