உடல் ஆரோக்கியத்தில் கவனம்

Update:2024-07-16 00:00 IST

2024 ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். எதிர்பாராத பயணம் இருக்கிறது. அந்த பயணம் நன்மையாகவும் முடியும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. லாபம் இல்லை. அம்மாவின் உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்துங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி தவிர வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கிறது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் பரவாயில்லை. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் நார்மலான முதலீடு செய்யுங்கள். நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும் என்பதற்காக கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். வேலையை பொறுத்தவரை எந்த அளவுக்கு முயற்சி எடுத்து செய்கிறீர்களோ அந்த அளவுக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கும். அதேபோன்று பணி உயர்வு, சம்பள உயர்வு, பணப்பயன் போன்றவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த வாரம் அதற்கான சூழ்நிலைகள் உள்ளன. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். ஆண் வேலையாட்கள் அமைவார்கள். போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுக்களில் கலந்து கொண்டிருந்தால் தேர்ச்சி பெறுவீர்கள். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்