வீண் பேச்சுக்களை தவிர்க்கவும்
தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.
2023, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்று பார்த்தால், நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. விட்டுக்கொடுத்து போனால் கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குடும்பம் சார்ந்த எல்லா நிகழ்வுகளிலும் சாதகம் மற்றும் பாதகமான நிகழ்வுகள் நடைபெறும். பிரச்சனைகளில் இருந்து விடுபட காளஹஸ்தி மற்றும் கால பைரவர் வழிபாடு சிறந்தது. இந்த வார ராசியை பொறுத்தவரை, 10, 11, 12 ஆகிய தேதிகளில், சாதகமான நல்ல பலன்கள் கிடைக்கும். சிறு சிறு முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். 13, 14, 15 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டம தோஷம் ஏற்படும். அதனால் அன்றைய தேதிகளில் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். 16 ஆம் தேதி உடல் நலம் சார்ந்த விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.