உறவுகளை பலப்படுத்துங்கள்

Update:2024-10-22 00:00 IST

2024 அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சுய தொழில், சிறு தொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ், பிளாட்பார பிசினஸ் செய்பவர்களுக்கு உங்களின் தொழில் லாபகரமாக வருமானத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஆரம்பத்தில் தடை இருந்தாலும், இறுதியான வெற்றி உங்களுக்குத்தான். என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும். அது நடப்பதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலைகள் உருவாகும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட், லாட்டரி டிக்கெட் போன்றவற்றில் அடக்கி வாசியுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல புகழ், அந்தஸ்து, வருமானங்கள் இருக்கிறது. உங்களின் அரசியல் வாழ்க்கை கௌரவம், அந்தஸ்தை கொடுக்கும்; சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதையை கூட்டும். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. புதிய காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். காதல் முறிவு ஏற்பட்டிருந்தால் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்தால் சுமாராக இருக்கும். ஏற்றுமதி தொழிலில் நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும். போட்டித்தேர்வுகள் எழுதி ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். உறவுகளை பலப்படுத்துங்கள். நெருங்கிய நண்பர்களை பிரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் விநாயகரையும் குறிப்பாக, முருகனையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்