உறவுகளால் நிம்மதி இருக்காது

Update:2025-01-21 00:00 IST

2025 ஜனவரி 21-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கல்வி பரவாயில்லை. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கிறது. புதிய காதல் விஷயங்கள், ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. ஆனால், லாபம் இல்லை. விவசாயத்தில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், லாட்டரி, மியூச்சுவல் ஃபண்ட், கிரிப்டோ கரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது வேண்டாம். எல்லாமே லாபம் கொடுப்பது மாதிரியான தோற்றம். ஆனால் லாபம் இல்லை. நம்முடைய பணம் பொருள் முடங்கிக்கொள்ளும்; அல்லது மாட்டிக்கொள்ளும். உறவுகளால் தேவையற்ற, மன நிம்மதியற்ற சூழ்நிலைகள் இருக்கிறது. உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கும் கருடாழ்வாரையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்