பணம் முடங்க வாய்ப்பு
2024 நவம்பர் 05-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம் இருக்கிறது. வேலையில் பணி உயர்வு இருக்கிறது. சம்பள உயர்வு, மானிட்டரி பெனிஃபிட்ஸ் நிறைய இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கண்டிப்பாக கிடைக்கும். அதன் மூலம் இடம், வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. கல்வியை பொறுத்தவரை நன்றாக உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து இருக்கிறது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். உங்களுக்கு வருமானங்கள் இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி, ஸ்டாக் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட் வந்தால் தேர்ச்சி பெறுவீர்கள். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு பரவாயில்லாமல் இருக்கிறது. பிசினஸை பொறுத்தவரை தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை ஆகியவை இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டுவிட்டு நடக்கும். பணம் முடுங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் முழுமுதற் கடவுளாம் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.