தொழிலில் ஏற்றம்

Update: 2024-12-16 18:30 GMT

2024 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட தூர பயணம் செல்ல நினைப்பவர்கள் அதற்கான திட்டமிடலை இப்போதே செய்யுங்கள். வெளிநாட்டு தொடர்புகள் நன்றாக இருப்பதால் உயர்கல்விக்காக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை. சிறு தொழில், சுயதொழில், பெரிய அளவில் பிசினஸ் செய்பவர்களுக்கு சுமாராக இருக்கிறது. குறிப்பாக பிளாட்பார தொழில், தரகர் தொழில் போன்ற எந்த தொழில் செய்தாலும் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலை தேடுபவர்களுக்கு வேலைக்கான முன்னேற்றம் இருக்கிறது. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. அந்த காதல் வெற்றி பெறும். ஷேர் மார்க்கெட்டில் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்