பேச்சை குறையுங்கள்

Update:2024-11-12 00:00 IST

2024 நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இடம் வாங்குவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. தேவையில்லாத பேச்சுக்களை குறையுங்கள். தேவையில்லாதவற்றில் தலையிடாதீர்கள். அதனால் மன உளைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. பணி உயர்வு, சம்பள உயர்வு, போனஸ், மானிட்டரி பெனிஃபிட்ஸ் ஆகியவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் அது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றியடையும். நினைப்பது நடக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட் வந்தால் வெற்றிபெறுவீர்கள். சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குறிப்பாக, இரண்டாம் திருமணத்திற்கு நிறையவே வாய்ப்புள்ளது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். அதற்காக செலவு செய்ய வேண்டிய வாரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நல்ல நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் முழுமுதற் கடவுளாம் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.   

Tags:    

மேலும் செய்திகள்