துணிந்து செயல்படுங்கள்

Update:2024-10-15 00:00 IST

2024 அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் செய்யும் பிசினஸ் சுமாராக உள்ளது. ஒருபக்கம் வருமானம் வருவதுபோல் ஒரு தோற்றம், இன்னொருபக்கம் பணம், பொருள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் செய்பவர்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். பெரிய அளவில் முதலீடு வேண்டாம். புதிய காதல் மலர்ந்து அது பின்னாளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான முதலீடே செய்யுங்கள். ஓரளவுக்கு ரிட்டன்ஸ் கிடைக்கும். குறிப்பாக டிஜிட்டல் கரன்சி, மியூச்சுவல் ஃபண்ட், லாட்டரி டிக்கெட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஓரளவு நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. துணிந்து சில காரியங்களில் ஈடுபடுங்கள்; பரவாயில்லாமல் இருக்கும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். கல்வியில் பெரிய அளவில் வருவீர்கள். நீங்கள் நினைப்பது அனைத்தும் ஏதோவொரு விதத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் காதல் வெற்றியடையும். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். எல்லா உறவுகளையும் டெவலப் செய்யுங்கள். அவர்களோடு விட்டுக்கொடுத்து போங்கள். இல்லையென்றால் அந்த உறவுகளால் தேவையற்ற மனவருத்தங்கள், பிரச்சினைகள், போராட்டங்கள் ஆகியவற்றை சந்திக்க வேண்டிவரும். உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷைகள் பூர்த்தியாகும். வேலையில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. இந்த வாரம் முழுவதும் விநாயகரையும், பிரம்மாவையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்