பொருள் விரயம் ஏற்படும்
2023, செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிஷ வித்யாபதி கருணா.
அனைத்து விஷயங்களும் மிக விரைவாக நடக்கும். அப்படி நடைபெறும் பட்சத்தில் அதுவே பாதகமாகவும் அமையும். கடந்த இரண்டரை வருடங்களாக ஏழரை சனி நடப்பதால், சில முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நன்மையை ஏற்படுத்தும். அதிக பொருள் விரயம் ஏற்படுமென்பதால், அதிகமாக முதலீடு செய்யாமல் இருப்பது சாதகமான பலனைக் கொடுக்கும். சனியின் தாக்கத்திலிருந்து விடுபட சனிக்கிழமை திருநல்லாறுக்கு சென்று, இரவு தங்கி வழிபட வேண்டும். மேலும், வீட்டிற்கு அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று நெல், எண்ணெய் விளக்கேற்றி வழிபாடு செய்ய நற்பலன் கிட்டும். படிக்கும் பிள்ளைகள் வராகி அம்மன் மற்றும் ஹயக்ரீவர் வழிபாட்டை செய்ய கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.