இந்தியாவுக்கு கவுதம் கம்பீர்! இலங்கைக்கு சனத் ஜெயசூர்யா! - ஜெயிக்கப்போவது யாரு?

இம்மாதம் இறுதியில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. ரோஹித்,கோஹ்லி மற்றும் பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இரண்டு அணிகளும் தற்போது புதிய பயிற்சியாளர்களை நியமித்திருக்கின்றனர். அதில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. அதன்பிறகு இலங்கை அணி அதிரடி ஆட்டக்காரர் முன்னாள் இலங்கை தொடக்க வீரர் சனத் ஜெயசூரியாவை நியமித்திருக்கிறது. இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் எப்படை வெல்லும் என்கின்ற எதிர்பார்ப்பே எகிறியுள்ளது. சமீபத்தில் இருவரும் தங்கள் அணிகளின் வியூகம் மற்றும் வீரர்களின் திறனை குறித்து கூறியுள்ளனர், அதை பற்றி விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.

Update: 2024-07-15 18:30 GMT
Click the Play button to listen to article

இம்மாத இறுதியில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இரண்டு அணிகளும் தற்போது புதிய பயிற்சியாளர்களை நியமித்திருக்கின்றன. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கைக்கு, அந்த அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இந்தியாவா? இலங்கையா? என ரசிகர்கள் மத்தியில் எப்படை வெல்லும் என்கின்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதினிடையே, புதிய பயிற்சியாளர்கள் இருவரும் சமீபத்தில் தங்கள் அணியின் வியூகம் மற்றும் வீரர்களின் திறன் குறித்து பேசியுள்ளனர். அதை பற்றி விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர்!

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தனது எக்ஸ் தள பக்கத்தில் கவுதம் கம்பீர் உடனான புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமகால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. மாறிவரும் சூழலை கவுதம் கம்பீர் அருகிலிருந்து பார்த்துள்ளார்" என்று ட்வீட் செய்துள்ளார்.


அணியின் நலனுக்காக மட்டுமே விளையாடுங்கள் என வீரர்களுக்கு கவுதம் கம்பீர் அறிவுரை

3 வகையான ஃபார்மட்டிலும் விளையாடுங்கள் - கவுதம் கம்பீர்

"காயம் ஏற்படுவது என்பது விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி. விளையாட்டின் போது காயம் ஏற்பட்டால் குணமடைந்து விடுவீர்கள். மீண்டும் விளையாடுவீர்கள். ஆனால் வீரர்கள் மூன்று வகையான போட்டிகளிலும் விளையாட வேண்டும். தொழில்முறை கிரிக்கெட் வீரர்களைப் பாருங்கள், உங்களுக்கு மிகச் சிறிய இடைவெளியே கிடைத்துள்ளது. நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாடும்போது உங்களால் முடிந்தவரை விளையாட வேண்டும். நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும்போது, ​​மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வடிவங்களிலும் விளையாடுங்கள். நேர்மையுடன் முயற்சி செய்து விளையாடுவதற்கு ஒரே ஒரு செய்தி மட்டுமே உள்ளது. ஒரு தொழிலுக்கு உங்களால் முடிந்தவரை நேர்மையாக இருங்கள்.

"நான் மட்டையை எடுத்தபோது, முடிவுகளைப் பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை. அதிக ரன்களை மட்டுமே எடுக்க விரும்பினேன். முழு உலகமும் உங்களுக்கு எதிராக இருப்பதாக நீங்கள் நினைத்தாலும் முயற்சி செய்யுங்கள், ஆனால் அணியின் நலனுக்காக நீங்கள் சரியானதைச் செய்கிறீர்கள் என்று உங்கள் இதயம் நம்பும்படி செய்யுங்கள். கிரிக்கெட் களத்தில் நான் ஆக்ரோஷமாக இருந்திருந்தாலும், மற்றவர்களுடன் மோதலில் ஈடுபட்டிருந்தாலும், அவை அனைத்தும் அணியின் நலனுக்காக மட்டுமே. எதை செய்தாலும் முழு முயற்சியுடன் செய்ய வேண்டும். ஏனென்றால் இறுதியில் அணிதான் முக்கியம்" என்று கம்பீர் கூறியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட உள்ள சூழலில் கம்பீரின் இந்த பேச்சு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


தொடர் தோல்வியால் இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ராஜினாமா

இலங்கை கிரிக்கெட்டின் பரிதாப நிலை

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது இலங்கை அணி. அதேபோல், டி20 உலகக் கோப்பையிலும் சொதப்பிய இலங்கை அணி, கத்துக்குட்டி அணிகளிடம் எல்லாம் தோல்வி அடைந்தது. ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் எதிரணியை மிரட்டிய இலங்கை அணி, அண்மை காலங்களில் மோசமாக விளையாடி வருவது, அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இலங்கை தோல்வியை தழுவிய பிறகு, அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் ராஜினாமா செய்தார். இதனிடையே இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இலங்கை அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.


இலங்கை அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா

இலங்கையின் புதிய பயிற்சியாளரான ஜெயசூர்யா!

இலங்கை அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6973 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல் ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரை 445 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதில் 13,430 ரன்களை குவித்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் சனத் ஜெயசூர்யா. இச்சூழலில்தான், செப்டம்பரில் இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடியும்வரை இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா செயல்படுவார் என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இதனால் இந்தியா - இலங்கை இடையேயான தொடரில் எந்த அணி வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்