ஐபிஎல் ஏலத்தில் யாருமே வாங்காததால் அசிங்கப்பட்டு, வேறு வழியின்றி அணிக்குள் வந்து, தற்போது அசத்தல்!

கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் அதிக ரன்களை எடுப்பதற்கும், ஒரு பௌலர் எக்கச்சக்க விக்கெட்டுகளை குவிப்பதற்கும் அதீத திறன் வேண்டும் என நினைப்போம். அப்படியிருப்பவர்கள் மட்டும்தான் சாதிக்க முடியும் என நினைப்போம். அந்த கூற்றை பொய்யாக்கியவர் ஷர்துல் தாக்கூர்.;

Update:2025-04-01 00:00 IST
Click the Play button to listen to article

கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் அதிக ரன்களை எடுப்பதற்கும், ஒரு பௌலர் எக்கச்சக்க விக்கெட்டுகளை குவிப்பதற்கும் அதீத திறன் வேண்டும் என நினைப்போம். அப்படியிருப்பவர்கள் மட்டும்தான் சாதிக்க முடியும் என நினைப்போம். அந்த கூற்றை பொய்யாக்கியவர் ஷர்துல் தாக்கூர். சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஷர்துல் தாக்கூர் 'Unsold' ஆகியிருந்தார். அங்கிருந்து இப்போது பர்ப்பிள் தொப்பியை தலையில் கிரீடமாக அணிந்திருக்கிறார். ரஞ்சி, சையது முஷ்டாக் அலி என்று உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடிய போதிலும், எந்த அணியும் ஷர்துல் தாக்கூரை வாங்கவில்லை. இத்தொகுப்பில் ஷர்துல் தாக்கூரின் கம்பேக் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.


இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பாக செயல்பட்ட ஷர்துல் தாக்கூர்

"இம்பாக்ட் பிளேயர்" தாக்கம்!

இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்குப் பிறகு அணிகளில் ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவம் குறைந்திருக்கிறது. தேவையெனில் ஒரு ப்யூர் பேட்டரை இறக்கிக் கொள்ளலாம். அல்லது கூடுதலாக ஒரு ப்யூர் பௌலரை இறக்கிக் கொள்ளலாம். இதுதான் அணிகளின் எண்ணம். ஷர்துல் தாக்கூரை போல இரண்டு திறன்களிலும் மேதைமை பெறாமல் இருப்பவர்கள் அணிக்கு தேவையில்லை என நினைத்தனர். அதனால்தான் சில மாதங்களுக்கு முன்பு நடந்த மெகா ஏலத்தில் எந்த அணியும் ஷர்துல் தாக்கூர் மீது நம்பிக்கை வைத்து எடுக்கவில்லை. அவரும் 'Unsold' ஆனார். இந்த சீசனில் ஐபிஎல் இல்லை என முடிவானவுடன் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்ட்டி போட்டியில் ஆட 'Essex' அணியுடன் ஒப்பந்தமும் போட்டுவிட்டார்.


மொஹ்சின் கானுக்கு மாற்று வீரராக லக்னோ அணியில் சேர்க்கப்பட்ட ஷர்துல்

'ரஞ்சி ஃபார்ம்!'

ஆனால், இன்னொரு பக்கத்தில் உள்ளூரில் மும்பை அணிக்கு அவர் கையில் இருக்கும் திறனை வைத்து மிகச்சிறப்பாக ஆடினார். கடைசியாக நடந்து முடிந்த ரஞ்சி சீசனில் 9 போட்டிகளில் 505 ரன்களுடன் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மும்பை அணி இக்கட்டான கட்டங்களில் சிக்கிய போதெல்லாம் காப்பாற்றினார். இதைப் பார்த்துவிட்டுதான் லக்னோ அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்தும் ஜாகீர் கானிடமிருந்தும் ஷர்துலுக்கு அழைப்பு சென்றிருக்கிறது. 'மயங்க் யாதவ், மோஷின் கான் என தங்கள் அணியின் பௌலர்கள் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கான சரியான ரீப்ளேஸ்மெண்ட்டாக உங்களை பார்க்கிறோம். தயாராக இருங்கள்' என ஜாகீர் கான் செய்தி சொல்லியிருக்கிறார். உடனடியாக கவுண்ட்டி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி ஐபிஎல் மோடுக்கு வந்தார் ஷர்துல். லக்னோ அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மோஷின் கானுக்கு பதில் ஷர்துல் தாக்கூர் ரீப்ளேஸ் செய்யப்பட்டார். 


சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்ட ஷர்துல் தாக்கூர் 

கழட்டிவிட்ட சென்னை!

சென்னை அணி சாம்பியனான 2018 மற்றும் 2021 சீசன்களில் கிட்டத்தட்ட தலா 20-க்கும் நெருக்கமான விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் ஷர்துல். பார்ட்னர்ஷிப்களையெல்லாம் அழகாக உடைத்துவிடுவார். விக்கெட் தேவை எனும்போது விக்கெட் எடுத்துக் கொடுப்பார். ஐபிஎல் தொடரில் அதிகப்படியான போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாக்கூர் இடம்பெற்று 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2024 ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக 9 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய ஷர்துல் தாக்கூரை சென்னை அணி கழட்டிவிட்டது. அதன்பிறகு இந்த தொடரில் 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.


லக்னோ அணியில் கம்பேக் கொடுத்த ஷர்துல் தாக்கூர் 

ஷர்துல் தாக்கூரின் மிகச்சிறந்த கம்பேக் !

மோஷின் கானுக்கு பதில் ஷர்துல் தாக்கூர் லக்னோ அணியில் ரீப்ளேஸ் செய்யப்பட்டார். டெல்லிக்கு எதிரான முதல் போட்டியிலேயே களமிறங்கினார். முதல் ஓவரை வீசினார். அந்த முதல் ஓவரிலேயே ஜேக் ப்ரேஸர் மெக்கர்க், அபிஷேக் பொரேல் என இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திக் கொடுத்தார். போட்டியில் லக்னோ கடைசி வரை இருந்ததற்கு ஷர்துல் தொடக்கத்தில் வீழ்த்திக் கொடுத்த விக்கெட்டுகள்தான் காரணமாக இருந்தது. அதன்பிறகு இரண்டாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை தனது அபார பந்துவீச்சால் துவம்சம் செய்தார். ஆரம்பத்திலேயே அபிஷேக் சர்மாவையும் இஷன் கிஷனையும் லெக் சைடில் குறிவைத்து வீசி தூக்கினார். இந்த விக்கெட்டுகளிலிருந்துதான் சன்ரைசர்ஸ் சரிய தொடங்கியது. இறுதியில் ஷர்துல் 4 ஓவர்களில் 34 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஐபிஎல் கரியரில் அவரின் தலைசிறந்த பௌலிங் இதுதான். அதேமாதிரி, ஐபிஎல்-இல் தனது 100-வது விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சீசனில் பர்ப்பிள் தொப்பியை அணியும் முதல் வீரரும் ஆகியிருக்கிறார்.


பர்ப்பிள் நிற தொப்பியை வாங்கிய ஷர்துல் தாக்கூர் 

ஜாகீர் கானுடன் ஒரு புதிய அனுபவம்!

இன்னிங்ஸ் இடைவேளையில் பேசிய ஷர்துல் தாக்கூர், 'இதெல்லாம் கிரிக்கெட்டில் நடக்கத்தான் செய்யும். ஏல நாளன்று அது எனக்கான நாளாக இல்லை. எந்த அணியும் என்னை எடுக்கவில்லை. லக்னோ அணியில் சில வீரர்கள் காயமடைந்ததால் என்னை தொடர்பு கொண்டார்கள். ஜாகீர் கானுடன் இணைந்து பயணிப்பதும் நல்ல அனுபவமாக இருக்கிறது. எல்லாருக்கும் திறமை இருக்கும். ஃபார்மும் குறிப்பிட்ட அந்த நாளும் நமக்கானதாக இருக்கிறதா என்பதே முக்கியம். சன்ரைசர்ஸ் பேட்டர்கள் பௌலர்களுக்கு எதிராக தீவிரமான அணுகுமுறையை கடைபிடிக்கும்போது, பௌலர்களும் ஏன் அவர்களின் மீது தீவிரமான அணுகுமுறையை கடைபிடிக்கக்கூடாது என்பதுதான் எங்களின் கேள்வியாக இருந்தது. அதற்கேற்ற வகையில்தான் நாங்களும் திட்டம் தீட்டினோம்.' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்