ஐபிஎல் ஏலம் ஸ்பெஷல்! - இம்முறை சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி எது?

உலகில் தலைசிறந்த கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் நல்ல விலைக்கு ஏலம் போனார்கள். ஒவ்வொரு அணியும் தனக்கான லெவனை தேர்வு செய்தது. குறிப்பாக பல இளம் வீரர்கள் நல்ல தொகைக்கு ஏலம் போனார்கள்

Update: 2024-12-02 18:30 GMT
Click the Play button to listen to article

உலகில் தலைசிறந்த கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்த ஏலத்தில் பல வீரர்கள் நல்ல விலைக்கு ஏலம் போனார்கள். ஒவ்வொரு அணியும் தனக்கான லெவனை தேர்வு செய்தது. குறிப்பாக பல இளம் வீரர்கள் நல்ல தொகைக்கு ஏலம் போனார்கள். சவூதி அரேபியாவில் இருக்கும் ஜெடா என்னும் நகரத்தில் நடந்த இந்த ஏலத்தில் மொத்தமாக 640 கோடி ரூபாய், வீரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் 182 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதில் 62 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவார்கள். அதிகபட்சமாக இந்த ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த், 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். இப்பொழுது இந்த கட்டுரையில் ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எடுத்த வீரர்களை பற்றி விரிவாக பார்ப்போம்.


மீண்டும் சென்னை அணியில் இணைந்த சாம் கர்ரன் 

கம்மி விலைக்கு கிடைத்த சாம் கர்ரன் - சென்னை சூப்பர் கிங்ஸ்

ஏற்கனவே 5 வீரர்களை ரீட்டைன் செய்த சென்னை அணி, 55 கோடியுடன் ஏலத்திற்கு வந்தது. சென்னை அணி இந்த ஏலத்தில் 54.95 கோடி செலவு செய்து 25 வீரர்களை எடுத்தது. இதில் எந்த வீரரை சிறந்த தொகைக்கு வாங்கியது என்றால் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கர்ரனை 2.40 கோடிக்கு வாங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது சென்னை. இந்த தொகைக்கு இவர் மிகச்சிறந்த வீரர். அதுமட்டுமில்லாமல் கடந்தமுறை 18.5 கோடிக்கு ஏலத்தில் போனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடி சென்னை ரசிகர்களால் "கடைக்குட்டி சிங்கம்" என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இம்முறை சென்னை அணியில் அவர் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


15 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்ட ஜோஸ் பட்லர் 

ஷுப்மன் கில்லுடன் இணையும் ஜோஸ் பட்லர் - குஜராத் டைட்டன்ஸ்

69 கோடியுடன் ஏலத்திற்கு வந்த குஜராத் அணி, மிகச்சிறந்த வீரர்களை எடுத்துள்ளது. ககிசோ ரபாடா, மொஹம்மது சிராஜ் உள்ளிட்ட வீரர்களை எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த ஏலத்தில் குஜராத் அணி எந்த வீரரை சிறந்த தொகைக்கு எடுத்தது என்றால், இங்கிலாந்தின் அதிரடி துவக்க வீரர் ஜோஸ் பட்லர்தான். 15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜோஸ் பட்லர், இதற்கு முன்பு ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பட்லர், தற்போது ஷுப்மன் கில்லுடன் இணைகிறார்.


டெல்லி அணியில் இணைந்த கே.எல். ராகுல் 

எதிர்பாராத விலைக்கு கிடைத்த கே.எல். ராகுல் - டெல்லி கேப்பிட்டல்ஸ்

கேப்டன் ரிஷப் பந்த்தை அணியிலிருந்து கழட்டிவிட்ட டெல்லி அணி, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை ஏலத்தில் எடுக்க காத்திருந்தது. இந்த ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் போன பந்த்தை போல கே.எல். ராகுலும் அதிக தொகைக்கு போவார் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில் வெறும் 14 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மொத்த ஏலத்திலும் சிறந்த தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்றால் அது கே.எல். ராகுல்தான். கேப்டனாகவும் டெல்லி அணிக்கு செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் ஃபார்முக்கு வந்த ராகுல், டெல்லி அணியில் பந்த்தின் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் 

மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள காத்திருக்கும் கொல்கத்தா 

இந்த ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் கொல்கத்தாவும் ஒன்று. வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடிக்கு எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கடந்த முறை சிறப்பாக செயல்பட்டதால் இம்முறை அதிக நம்பிக்கை வைத்து வெங்கடேஷ் ஐயரை எடுத்தது. வெறும் 41 கோடியுடன் ஏலத்தில் கலந்து கொண்ட கொல்கத்தா அணி, 24 கோடியை வெங்கடேஷுக்கே  செலவு செய்ததால் மிகப்பெரிய தொகையை வேறு வீரர்களுக்கு செலுத்த முடியாமல் தவித்தது. டிகாக், மெயின் அலி போன்ற வீரர்களை கம்மி விலையில் எடுத்தது. தற்போது எப்படி அணியை சரி செய்து 2025-ஆம் ஆண்டு களமிறங்குகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்ட ரிஷப் பந்த் 

அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப் பந்த் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

அனைவரும் ஏலத்தில் எதிர்பார்த்த வீரர்தான் ரிஷப் பந்த். எந்த அணி இவரை வாங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், லக்னோ அணி இவரை 20.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பின் ஆர்.டி.எம் பயன்படுத்தி 27 கோடியாக டெல்லி அணி விலையை உயர்த்தியது. அப்படியும் 27 கோடிக்கு பந்த்தை வாங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது லக்னோ அணி. சமீபத்திய சர்வதேச தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் ரிஷப் பந்த் லக்னோ அணியின் பேட்டிங்கை மேலும் வலுப்படுத்துவார் என்று லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயல் கூறினார். அதுமட்டுமில்லாமல் லக்னோ அணியின் கேப்டனாகவும் ரிஷப் பந்த் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.


மீண்டும் மும்பை அணியில் இணைந்த ட்ரெண்ட் போல்ட் 

பும்ராவுடன் இணையும் ட்ரெண்ட் போல்ட் - மும்பை இந்தியன்ஸ்

ஏலத்தின் ஆரம்பத்திலிருந்தே எந்த வீரரையும் எடுக்க முன்வராத மும்பை அணி, ட்ரெண்ட் போல்ட் என்று பெயர் வந்ததும் சண்டையிட்டு அவரை 12 கோடிக்கு வாங்கியது. ஏற்கனவே வலுவாக இருக்கும் மும்பை அணி போல்ட்டை எடுத்து மேலும் வலுவாகியுள்ளது. பவர்பிளேவில் பந்து வீசுவதற்கு இவரைவிட சிறந்த பௌலர் இருக்க முடியாது. ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு மும்பை அணியில் விளையாடிய இவர், மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உதவியாக இருந்தார். தற்போது மீண்டும் பும்ராவுடன் இணைய காத்திருக்கும் போல்ட், இம்முறை மும்பை அணிக்கு கண்டிப்பாக சாம்பியன் பட்டம் வென்று தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பஞ்சாப் அணியால் 26.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர்

3 வீரர்களுக்கே 62 கோடி செலவு செய்த அணி - பஞ்சாப் கிங்ஸ்

இந்த ஏலத்தில் சுமார் 110 கோடியுடன் கலந்து கொண்ட பஞ்சாப் அணி 3 வீரர்களுக்கே 62 கோடியை செலவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. முதலில் பஞ்சாப் அணி தனக்கான கேப்டனை எடுத்தது. இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயரை 26.75 கோடிக்கு எடுத்தது. அதன்பிறகு 18 கோடிக்கு இந்திய வேக பந்துவீச்சாளர் அர்ஷிதீப் சிங்கையும், ஸ்பின்னர் சாஹலையம் எடுத்தது. மூன்று வீரர்களுக்கு தனது பாதி தொகையை செலவு செய்தது. இருப்பினும் தனக்கான வீரர்களை ஏலத்தில் சரியாக எடுத்தது.


மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்த ஜோப்ரா ஆர்ச்சர் 

மீண்டும் ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் - ராஜஸ்தான் ராயல்ஸ்

ட்ரெண்ட் போல்ட்டை அணியிலிருந்து கழற்றிவிட்ட பிறகு அவருக்கு மாற்று வீரரை ராஜஸ்தான் அணி தேடி கொண்டிருந்தது. தற்போது அதற்கான மாற்று வீரரை இந்த ஏலத்தில் எடுத்துள்ளது. 2020-ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளார் ஆர்ச்சர். 11.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆர்ச்சர், போன சீசனில் காயம் காரணமாக அணியில் விளையாடவில்லை. அதுபோல் சமீபத்தில்தான் மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்கி விளையாட ஆரம்பித்து இருக்கிறார். ஆர்ச்சர் காயம் அடையாமல் இருந்தால் கண்டிப்பாக ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.


பெங்களூரு அணியில் இணைந்த புவனேஸ்வர் குமார் 

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புவனேஸ்வர் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு

83 கொடியுடன் ஏலத்திற்கு சென்ற பெங்களூரு அணி, பல வீரர்களை வாங்காமல் பணத்தை செலவு செய்யாமல் ரொம்ப நேரமாக அமைதியாக இருந்தது. ஆரம்பத்தில் லிவிங்ஸ்டனை மட்டும் எடுத்திருந்தது. நீண்ட நேரம் கழித்து இந்திய வேகபந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரை 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அசத்தியது. ஒவ்வொரு வருடமும் பெங்களூரு அணியின் பந்துவீச்சு மோசமாகவே இருக்கும். இம்முறை ஹேசல்வுட், யாஷ் தயால் என்று தனது வேகபந்துவீச்சை வலுப்படுத்தியிருக்கிறது. தற்போது புவனேஸ்வர் குமாரின் சேர்ப்பு அணியை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. இம்முறையாவது பெங்களூரு அணி கோப்பையை வெல்லுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


ஹைதராபாத் அணியால் 10 கோடிக்கு வாங்கப்பட்ட மொஹம்மது ஷமி 

நீண்ட நாட்களுக்கு பிறகு மொஹம்மது ஷமி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஏற்கனவே வலிமையான அணியாக இருக்கும் ஹைதராபாத் அணி, மேலும் வலிமையை கூட்டுவதற்கு மொஹம்மது ஷமியை அணியில் எடுத்து அணியை பலமான அணியாக மாற்றியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இஷான் கிஷன், ராகுல் சாஹர் போன்றவர்களையும் எடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 45 கோடியுடன் ஏலத்திற்கு வந்த ஹைதராபாத் அணி மிகச்சிறந்த அணியை தற்போது உருவாக்கியுள்ளது. இம்முறை ஹைதராபாத் அணியும் கோப்பையை வெல்லுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்