இந்தியாவில் உருவான "கேரம்" விளையாட்டு! - கேரத்தில் கலக்கும் சென்னை!
இன்று தெற்காசியாவில் பலரால் விரும்பி விளையாடப்படும் விளையாட்டுகளில் கேரம் அல்லது சுண்டாட்டம் விளையாட்டும் ஒன்று. உள்ளரங்கம் விளையாட்டான இது ஆசியா கண்டங்களில் மிகவும் பிரபலமான விளையாட்டு. இன்று நாம் அறிந்தபடி கேரம் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக விளையாடப்பட்டு வருகிறது
இன்று தெற்காசியாவில் பலரால் விரும்பி விளையாடப்படும் விளையாட்டுகளில் கேரம் அல்லது சுண்டாட்டம் விளையாட்டும் ஒன்று. உள்ளரங்கம் விளையாட்டான இது ஆசிய கண்டங்களில் மிகவும் பிரபலமான விளையாட்டு. இன்று நாம் அறிந்தபடி கேரம் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக விளையாடப்பட்டு வருகிறது, குறிப்பாக கேரம் விளையாட ஆரம்பித்தது சூதாட்டத்திற்காகதான். பிறகு மெல்ல மெல்ல சர்வதேச விளையாட்டாக இது மாறியது. இந்த கேரம் விளையாட்டிற்கு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தரநிலைகள் மற்றும் விதிகள் உள்ளன. கேரம் என்ற சொல்லுக்கு "தாக்குதல் மற்றும் மீள்வது" என்று பொருள். பல சுவாரசியங்கள் நிறைந்த இந்த கேரம் விளையாட்டை இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
இந்தியாவின் பழமையான விளையாட்டு கேரம்
கேரம் விளையாட்டின் வரலாறு
கேரம் விளையாட்டு இந்தியாவிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் பாட்டியாலாவில் இருக்கும் அரண்மனை ஒன்றில் கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு கேரம் போர்டு இன்றும் இருக்கிறது. ஆதலால் கேரம் விளையாட்டு இந்தியாவில் தோன்றியதாக ஒருசிலர் கூறுகின்றனர். இன்னும் ஒருசிலர் திமோர் நகரிலிருந்து போர்ச்சுகீசியர்களால் உருவானது என்று கூறுகின்றனர். இப்படி இன்று வரை கேரம் விளையாட்டு எப்படி தோன்றியது என்று யாருக்கும் சரியாக தெரியவில்லை என்பதே உண்மை. ஆனால் 1958-ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து கேரம் விளையாடியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
திரைப்படத்தில் கேரம் ஆடுவதுபோன்ற காட்சியில் தனுஷ்
கேரம் விளையாட்டில் சென்னையின் பங்கு
இந்தியாவில்தான் முதன்முறையாக சர்வதேச கேரம் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ICF என்று அழைக்கப்படும் சர்வதேச கேரம் கூட்டமைப்பு 1988-ஆம் ஆண்டு இந்தியாவில் சென்னையில் உருவாக்கப்பட்டது. பிறகு இந்த விளையாட்டிற்கான முறையான விதிகள் 1988-ஆம் ஆண்டே வெளியிடப்பட்டன. அதே ஆண்டில் ICF அதிகாரப்பூர்வமாக விதிகளை வெளியிட்டது. அதன்பிறகு UKCF 1991-ஆம் ஆண்டு லண்டனில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் முக்கிய பணி இங்கிலாந்து முழுவதும் கேரம் விளையாட்டை ஊக்குவிப்பதும், அனைத்து முக்கிய சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்வதும் ஆகும். இப்படி UKCF இங்கிலாந்தில் 3 யூரோ கோப்பைகளை நடத்தியது. அதில் அற்புதமான பல வெற்றிகளையும் பெற்றுள்ளது. சமீபத்தில் சென்னையை சேர்ந்த காசிமா சான்ஃபிரான்சிஸ்கோவில் நடந்த கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதுமட்டுமில்லாமல் சென்னையில்தான் கேரம் விளையாட்டிற்கான சிறந்த வசதி இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
சர்வதேச விளையாட்டாக உருமாறிய கேரம்
உலகமெங்கும் பரவிய கேரம் விளையாட்டு
முதன்முதலில் கேரம் விளையாட்டை ஆதரிக்கும் மற்றும் பராமரிக்கும் நோக்கத்துடன் 1986-ஆம் ஆண்டு ஜெர்மன் கேரம் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. இந்த கூட்டமைப்பு ஜெர்மனியில் இருக்கும் கேரம் கிளப்புகள் மற்றும் ஜெர்மனி முழுவதும் இருக்கும் அணிகளை மேற்பார்வை செய்கிறது. அதன்பிறகு கேரம் ஆர்வலர்களின் குழு ஒன்று 2004-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கேரம் கூட்டமைப்பை ( PCF ) நிறுவியது. தற்போது இந்த விளையாட்டை ஊக்குவிக்கவும் கற்பிக்கவும் பாகிஸ்தான் முழுவதும் பல கிளப்களை உருவாக்க PCF தற்போதுவரை உழைத்து வருகின்றது. அதன்பிறகு இத்தாலிய கேரம் கூட்டமைப்பு 1995-ஆம் ஆண்டில் கேரம் ஆர்வலர்கள் குழுவால் நிறுவப்பட்டது மற்றும் இத்தாலி முழுவதும் விளையாட்டின் பரவலுக்கு பொறுப்பாகும். கூட்டமைப்பு ஏராளமான தன்னார்வலர்களால் ஆதரிக்கப்படுகிறது. அவர்கள் விளையாட்டைப் பற்றி கற்பிப்பதற்கும் கல்வி கற்பதற்கும் இத்தாலி முழுவதும் தொடர்ந்து நிகழ்வுகளை நடத்துகிறார்கள்.
கேரம் விளையாட்டின் உபகரணங்கள் மற்றும் விதிமுறைகள்
கேரம் விளையாட்டின் விதிமுறை
இந்த விளையாட்டு பொதுவாக மரப்பலகையால் செய்யப்பட்ட ஒரு சதுர பலகையில் விளையாடப்படுகிறது. ஒவ்வொரு மூலையிலும் ஒரு பாக்கெட் அதாவது ஒரு குழி உள்ளது. சர்வதேச கேரம் ஃபெடரேஷன் கூறுகையில், ஆடும் மேற்பரப்பு ஒவ்வொரு பக்கத்திலும் சரியாக 73.5 முதல் 74 சென்டிமீட்டர், அதாவது 28.9 மற்றும் 29.1 அங்குலம் வரை இருக்க வேண்டும் என்றும், விளிம்புகள் மரத்தாலான பம்பர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பாக்கெட்டின் அடிப்பகுதியும் வலையால் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. குறைந்தது 10 கேரம் துண்டுகளை வைத்திருக்க வேண்டும்.
சாம்பியன்ஷிப் வென்ற தமிழக வீராங்கனை காசிமா
கேரம் விளையாட்டின் விதிமுறைகள்
1. ஒவ்வொரு அணிக்கும் அல்லது வீரருக்கும் ஒரு வண்ணம் ஒதுக்கப்பட்டு, அந்த வீரர்கள் அந்த நிறத்தை மட்டுமே பாக்கெட் செய்ய முடியும்.
2. சிவப்பு காயை குழியில் அடித்தால் தொடர்ந்து அதே நிறுத்தத்தில் மற்றொரு காயை பாக்கெட் செய்ய வேண்டும்.
3. ஒரு விளையாட்டு 25 புள்ளிகளைக் கொண்டது.
4. ஸ்ட்ரைக்கரை ஷூட் செய்ய போர்டில் வைக்கும்போது, அது இரண்டு பேஸ்லைன்களையும் தொட வேண்டும், ஒன்று இறுதி வட்டத்தை முழுவதுமாக மூடும் அல்லது தொடவே கூடாது. ஸ்ட்ரைக்கர் அம்புக் கோட்டைத் தொடக்கூடாது.
5. ஸ்ட்ரைக்கரை ஷூட் செய்ய போர்டில் வைக்கும் போது, அது இரண்டு பேஸ்லைன்களையும் தொட வேண்டும், ஒன்று இறுதி வட்டத்தை முழுவதுமாக மூடும் அல்லது தொடவே கூடாது. ஸ்ட்ரைக்கர் மூலைவிட்ட அம்புக் கோட்டைத் தொடக்கூடாது.
6. ஷூட்டிங் ஸ்டைல்கள் வீரர்களுக்கு இடையில் மாறுபடலாம், ஆனால் எல்லா ஷாட்களிலும் ஸ்ட்ரைக்கரை ஃபிளிக் செய்வது மற்றும் அதைத் தள்ளாமல் இருக்க வேண்டும்
7. ஸ்ட்ரைக்கரை மூழ்கடித்தால் ஒரு காயை வைக்க வேண்டும் அதாவது அபராதம். ஸ்ட்ரைக்கரின் அதே ஷாட்டில் ஒரு பாக்கெட் செய்யப்பட்டால், அந்த காயும் அகற்றப்படும்.
8. இந்த விதிகள் பெரும்பாலும் இங்கிலாந்து, இலங்கை மற்றும் இந்தியாவில் விளையாடப்படுகின்றன.