உடல் பருமனால் மன உளைச்சலா? இந்த மாற்றங்கள் உங்களுக்கு உதவும்!

சிலருக்கு மருந்துகளுடைய பக்கவிளைவாலும் உடற்பருமன் ஏற்படுகிறது. சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உடற்பருமன் வரமால் தடுக்க உதவுகிறது.

Update: 2023-07-04 09:57 GMT

உடற்பருமன் பிரச்னையானது தற்போது உலகளாவிய பிரச்னையாகி விட்டது. தற்போதுள்ள வாழ்க்கைமுறை மாற்றங்களால் கார்போஹைட்ரேட், ட்ரான்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதுதான் உடற்பருமனுக்கு வழிவகுக்கிறது. பி.எம்.ஐ 25 மற்றும் அதற்கும் அதிகமானால் அதனை உடற்பருமன் என்கின்றனர். மெட்டபாலிக் பிரச்னைகள், இதய பிரச்னைகள், நீரிழிவு மற்றும் கேன்சர் போன்ற பல்வேறு வியாதிகளுக்கு உடற்பருமன்ம் வழிவகுக்கிறது என பல்வேறு ஆய்வுகள் விளக்குகின்றன.

மோசமான வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் மற்றும் பரம்பரை பிரச்னைகளால் உடற்பருமன் ஏற்படுகிறது. சிலர் எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடைய பக்கவிளைவாலும் உடற்பருமன் ஏற்படுகிறது. ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன்மூலம் உடற்பருமன் வரமால் தடுக்க முடியும்.

அதிக புரோட்டீன் டயட்: மேக்ரோ ஊட்டச்சத்துகளான புரதச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். தசைகள் மெலிவுக்கும் இது வழிவகுக்கும். தொடர்ந்து இந்த டயட்டை பின்பற்றும்போது கொழுப்புச்சத்து குறைவதுடன், நாள்முழுவதற்கும் தேவையான கலோரியும் கிடைக்கும். ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் புரதம் என கணக்குவைத்து சாப்பிடுவது உடற்பருமனுக்கு எதிராக போராடுவதுடன் எடைகுறைப்புக்கும் வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


ஜங்க் உணவுகளை தவிர்க்க வேண்டும்

சர்க்கரை பானங்களை கைவிடுதல்: உடல் எடை மற்றும் மெட்டபாலிக் பிரச்சினைகளுடன் அதீத தொடர்புடையது சர்க்கரை பானங்கள். பழ ஜூஸ்,  சோடா, மிக்சர், எனர்ஜி ட்ரிங்க் அல்லது ஏரேட்டட் ட்ரிங்க் எனப்படும் காற்றடைக்கப்பட்ட பானங்கள் எதுவானாலும் அதில் சர்க்கரை அதிகம். நீண்ட நாட்கள் அந்த பானங்களை எடுத்துக்கொள்வது உடற்பருமனுக்கு வழிவகுக்கும். எனவே இதுபோன்ற பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

உடற்பயிற்சி: எடைகுறைப்புக்கு சிறந்த வழி, டயட்டுடன் கூடிய உடற்பயிற்சி மட்டுமே. எனவேதான் தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். கார்டியோ பயிற்சி, எடை பயிற்சி, யோகா போன்ற ஏதேனும் ஒரு வகை பயிற்சியையாவது மேற்கொள்வது அவசியம். 


எடை குறைப்புக்கு உடற்பயிற்சி அவசியம்

புகைப்பிடித்தல்: உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடற்பருமனுக்கு புகைப்பிடித்தல் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. புகைப்பிடிப்பதால் ஒரு நன்மையும் கிடைப்பதில்லை. மாறாக, கேன்சர், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

தூக்கம்: ஒருநாளில் தினசரி 8 மணிநேரம் தூங்குவது மிகமிக அவசியம். தூக்கமின்மையால் மெட்டபாலிக் பிரச்னைகள், பசியின்மை அல்லது அதிகப்படியாக சாப்பிடுதல், இன்சுலின் பிரச்னை மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். போதுமான ஓய்வின்மையும் உடற்பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை கட்டுக்குள் வைப்பதுதான் உடற்பருமனை குறைப்பதற்கான சிறந்த வழி.

Tags:    

மேலும் செய்திகள்