உடல் ஆரோக்கியத்தில் கவனம்

Update: 2024-07-22 18:30 GMT

2024 ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் ஆசைகள், அபிலாஷைகள் பூர்த்தியாக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம். தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். பொருளாதார ரீதியாக பார்க்கும்போது பெரிய போராட்டங்கள் ஏதும் இல்லை. எல்லாவிதமான உறவுகளுடனும் நட்பை வளர்த்துக்கொள்வது நல்லது. இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள், வண்டி, வாகனம் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். லாபம் வருவது போன்ற தோற்றம் சுமாராகத்தான் இருக்கிறது. நீண்டதூர பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை பணி நிமித்தமாக இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம் இருக்கிறது. பணி நிமித்தமாக புதிய சூழலில் வாழ்க்கை நடத்துவீர்கள். பெரிய அளவில் யாருக்கும் கடன் கொடுப்பதோ, வாங்குவதோ வேண்டாம். சொந்த தொழில் சுமார். ஒன்றிற்கும் மேற்பட்ட பிசினஸ் செய்ய கூடிய காலங்களும் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அறுவை சிகிச்சை ஏதேனும் செய்வதாக இருந்தால் செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் அம்பாள் மற்றும் சிவனை வழிபாடு செய்யுங்கள்.   

Tags:    

மேலும் செய்திகள்

பணவரவு