காதல் கைகூடும்
2024 ஜனவரி 2 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நினைப்பதெல்லாம் நடக்கும். முயற்சிகள் வெற்றியடையும். பொருளாதார ரீதியாக ஏற்றம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் முதலில் தடை இருந்தாலும், இறுதியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்து காத்திருக்கும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பெரிய அளவில் சாதிப்பீர்கள். மேற்படிப்பை தொடருவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். காதலிக்க முயற்சித்து பிரச்சினைகளை சந்தித்து வருபவர்களுக்கு அவர்களின் காதல் கைகூடும். கூட்டுத் தொழில் கைகொடுக்கும். பணிமாற்றம் பெற விரும்புவோர் வேறு அலுவலத்திற்கு முயற்சிக்கலாம். வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சி படிப்புகளுக்கு முயற்சிப்பவர்கள் முயற்சிக்கலாம். வெளிநாட்டு பயணத்திற்கு விண்ணப்பித்திருந்தால் நல்லதொரு தகவல் வந்து சேரும். சனி பகவான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு கைகொடுக்கும்.