பேச்சில் வன்மம்
சனி பகவான் உங்கள் ராசிக்கு பாதகாதிபதியாக உள்ளதால் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் கவனமுடன் இருக்க வேண்டும்.
By : ராணி
Update:2023-10-03 00:00 IST
2023, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்
சனி பகவான் உங்கள் ராசிக்கு பாதகாதிபதியாக உள்ளதால் கூலித்தொழிலாளிகள், உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் கவனமுடன் இருக்க வேண்டும். வீடு, வாகனங்களை கவனமுடன் கையாண்டால் திருட்டு, விரைய செலவுகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம். 3 மற்றும் 4 தேதிகளில் மனக்குழப்பமும், 5 மற்றும் 6 தேதிகளில் குடும்பத்தில் குழப்பத்தையும், பேச்சில் வன்மமும் ஏற்படும். இவை அனைத்திலும் கவனமுடன் செயல்பட்டால் நல்லது நடக்கும். 7, 8 ஆகிய தேதிகளில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும்.