பேச்சை குறையுங்கள்

Update: 2024-08-26 18:30 GMT

2024 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்தமாக நிலம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள்,வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு, சந்தர்ப்பங்கள் இந்த வாரம் உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த நல்ல விற்பனை இருக்கிறது. ஆனால், அதற்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. கையில் பணம், தனம், பொருள் இருக்கும். இந்த வாரத்தில் உங்களின் பேச்சு பிரச்சினைகளை உண்டு பண்ணக்கூடிய வகையில் இருக்கும் என்பதால் கூடியவரை பேச்சை குறையுங்கள். மேலும், பொறுமையாகவும், நிதானமாகவும் பேசுங்கள். பிறர் சொல்வதை கவனமாக கேட்டுகொள்ளுங்கள். எதிர்த்து பேசி கவுண்டர் கொடுக்காதீர்கள். இதனை பின்பற்றினால் ஜெயிப்பீர்கள். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்ய வேண்டாம். எல்லாம் லாபம் வருவது மாதிரியான தோற்றம். ஆனால், எதுவும் லாபகரமாக இல்லை. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம் உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களின் பணம், பொருள் முடங்கிக் கொள்ளும் காலம் என்பதால் தேவையில்லாத எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். தலையிடவும் வேண்டாம். யாருக்கும் கடன் கொடுத்தால் அது திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து இருக்கிறது. வருமானங்கள் சுமார். அரசியலில் ஏற்ற, இறக்கம் மட்டுமின்றி தொண்டர்களால் பிரச்சினைகளும் இருக்கும். இந்த வாரம் முழுவதும், சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவையும், முருகனையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்