மணவாழ்க்கை மகிழ்ச்சி

Update:2024-07-30 00:00 IST

2024 ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. உங்களுடைய கல்வியை பொறுத்தவரையில் பரவாயில்லை. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் இருக்கும் சொத்துக்கள் விற்பனையாகும் அல்லது அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்ற ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் பொறுமையாக இருங்கள். லாபம் வருவது போன்ற ஒரு தோற்றம். ஆனால், லாபம் இல்லை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி இருக்கிறது. வருமானங்கள் இல்லை. சொந்த தொழில் பரவாயில்லை. மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். உங்களின் வேலையை பொறுத்தவரை பெரிய அளவில் முயற்சி எடுத்து செய்தால்தான் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பண வரவு, பொருள் வரவு, தனவரவு ஆகியவை இருக்கின்றன. முன்னோர்களுடைய சொத்துக்கள் இருந்தால் கிடைக்கும். கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு இருக்கிறது. இண்டஸ்ட்ரி தொடங்க வேண்டும், தொழில் முதலீட்டாளராக வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை, மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத நட்பு உருவாகும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.   

Tags:    

மேலும் செய்திகள்